நால்வர் தமிழக் கலை நிலைய கலை விழா 2020 ரத்துச் செய்யப்பட்டுள்ளது
எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவு...
நால்வர் தமிழ் கலை நிலையம்
ஒரு மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கும் அப்பால் அது அச்சமூகத்தின் கலாச்சார பாரம்பரியங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதினை இன்று பல்வேறு ஆய்வாளர்களும் அறிஞர்களும் நிருபித்து வந்துள்ள வேளையில், தாய் மொழியின் அவசியம், தேவை குறித்தும் அதன் பயன்பாடு குறித்ததுமான விழிப்புணர்வு இன்று பல்வேறு சமூகங்களிலும் அதிகரித்து வருகின்றது. அவ்வகையில் மேற்கத்தேய நாடுகளிற்கு, புலம் பெயர்ந்துள்ள எமது தமிழ் சமூகமும் எமது இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எமது தமிழ் கல்வியினைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை நன்கறிந்து வந்துள்ளனர். இத்தேவையினைப் பூர்த்தி செய்யுமுகமாக சைவ முன்னேற்றச் சங்கம்(UK) இன்றும் ‘தலைமுறை வழியே தமிழ் வளர்ப்போம்’ என்ற பதாகையின் கீழ் ‘நால்வர் தமிழ் கலை நிலையம்’ என்னும் ஒரு கல்விக் கூடத்தை நிறுவி பல தசாப்த காலமாக பல்வேறு அனுபவமும் தேர்ச்சியும் வாய்ந்த ஆசிரியர்களினால் தமிழ் மொழியினையும், சைவசமய வகுப்புகளையும் எமது இளம் சந்ததியினருக்கு போதித்து வருகின்றனர். அத்துடன் சங்கீதம், நடனம், வயலின், வீணை, மிருதங்கம் போன்றனவும் பிள்ளைகளிற்கு புகட்டி வருகின்றனர். அதுமட்டுமன்றி, வருடந்தோறும் நாவன்மை, திருமுறைப் போட்டியினையும், கலைவிழாவினையும், விளையாட்டுப் போட்டியினையும் நடாத்திவருகின்றனர்.
We conduct Tamil Lanuage Classes every Sunday during term times. After Tamil lessons, we also teach religion (Saivaism). NTA also offers fine arts classes in Miruthangam, Bharatha natiyam, Classical music, Violin and Veena. We believe in offering children the opportunity to understand the Tamil culture and tradition. Opportunities are provided for children to take part in the school's annual concert and also in the Sanga Temple events throughout the year.
எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவு...
நால்வர் தமிழ் கலை நிலைய நாள் காட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் நடைபெரும் புதிய நிகழ்வுகளுக்கும், நிகழ்வுகளில் மாற்றங்களுக்கும் இந்த இணையத்தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்
scolorship பரீட்சையில் இந்த ஆண்டில் அதி சித்தி பெற்ற சம்மாந்துறையில் வாழும் வறுமைக்கு கோட்டின் கீழ் உள்ள 83 மாணவர்களுக்கு விசேட பரிசில்கள் வழங்க £500.௦௦ நால்வர் தமிழ் கலைநிலை...