சைவ சமய பாட வகுப்புகள் Zoom வழியாக நடைபெறுகிறது

சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த சைவ சமய பாட வகுப்புகள் இப்போது மீண்டும் Zoom வழியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு புதன் கிழமையிலும் மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணி வரை சைவ சமய வகுப்புகள் நடைபெற்று 7.30 மணிக்கு எமது சிதம்பரேஸ்வரர் ஆலய இரவுப் பூசையில் கலந்து கொள்ளலாம். சைவ சமய வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ் காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். சைவ சமய வகுப்புக்கள் யாவும் இலவசமே.
சமய பாட வகுப்பு ஆசிரியர்கள்:
தமிழ் மாணி, சங்கீத கலாஜோதி. திருமதி. சுகன்யா சிவப்பிரியன்
திருமதி. ஷர்மிளா மனோகரன். BA (Hon)
செல்வி. தாட்சாயினி பிரேமநாதன். Bsc.
தேவார வகுப்பு (பண்ணிசை) ஆசிரியர்: கலைஞானச்சுடர். ஸ்ரீமதி. சுபாஷினி பிரணவன் (Sri Lanka)
எமது பாடத்திட்டம்:
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட சைவ நெறி என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வகுப்புகள் நடைபெறும். சைவ நெறி பாடப் புத்தகங்களை பெற விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
பரீட்சை
ஒவ்வொரு நிலை இறுதியிலும் பரீட்சைகள் சங்க பரீட்சைப் பிரிவால் நடத்தப்பட்டு வகுப்பேற்றப்படுவார்கள்
சைவ சமய வகுப்பு
ஒவ்வொரு புதன் கிழமை
நேரம்
6.00 மணி தொடக்கம் 7.30 மணி வரை
ஆலயத்தில் இறைவனுக்கு தேவாரம் புராணம் பாடும் நேரம்
7.00 மணி தொடக்கம் 7.30 மணி வரை
ஆலய பூசை
மாலை 7.30 மணி தொடக்கம் 8.00 மணி வரை
அர்ச்சனை
ஆலய பூசைகள் 8.00 மணிக்கு முடிவடைந்தவுடன் இறைவனுக்கு அருச்சனை செய்ய விரும்பும் பெற்றோர்கள் அர்ச்சனை Zoom ஊடாக செய்யலாம்.பெயர் விபரங்கள் முன் கூட்டியே எமது What'sapp மூலமாக எமக்கு அறியத்தரவும்
Contact:
Mr. S Niranjan 07876404354
Mr. S. Balasingam 07956513669
Mr. S. Ratnarajah 07956446195