சைவ சமய பாட வகுப்புகள் ஆரம்பம்
எதிர் வரும் 06.09.17 புதன் கிழமை மாலை 7.00 இருந்து சைவ சமய பாட வகுப்புகள் சங்கத்தில் ஆரம்பமாகிறது. பங்கு பற்ற விரும்பும் மாணவர்கள் கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
வாரம் தோறும் கோவில் வழிபாட்டு முறை பற்றியும் சைவ பண்டிகைகள், விரதங்கள், விசேஷ தினங்கள் பற்றியும் எமது இளம் சமுதாயத்திற்கு நவீன முறையில் விளக்கம் அளிக்க வோல்தம்ஸ்டோவ் கற்பக விநாயகர் ஆலைய பிரதம குரு சிவஸ்ரீ வசந்தக் குருக்கள் மாணவர்களுக்கு பாடங்களை புகட்டுவார்.
வகுப்புகள் மாலை 7.00 மணி தொடக்கம் 7.45 மணி வரை சங்க மண்டபத்தில் நடைபெற்று பின் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் 8.௦௦ மணி பூசையில் கலந்து கொண்டு கோவில் வழிபாட்டு முறைகள் பற்றி ஆலைய பிரதம குரு சிவ ஸ்ரீ ரமேஷ் குருக்கள் அவர்களால் நடாத்தப்பட்டு எல்லா மாணவர்களுக்கும் அருச்சனை வழங்கப்படும். வகுப்புகளில் மாணவர்களும் உதவி ஆசிரியர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சங்கத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சைவ நெறி பாடப் பரீட்சையில் பங்குபற்றி சித்தி எய்தலாம். மாணவர்கள் அனைவரும் கேம்பிரிட்ஜ் பரீட்சையில் பங்குபற்றலாம்.
எல்லா பாடங்களும் சங்கத்தினால் வெளியிடப்பட்ட சைவ நெறி பாட நூலை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படும். மேலதிக விபரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்: திரு. சோதிரட்ணம் நிரஞ்சன்: 0787 640 4354