இலங்கை GCE O/L மாணவர்களுக்கான இலவச மாதிரிப் பரீட்சை 2021

சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்படும் இலங்கை GCE O /L மாணவர்களுக்கான இலவச மாதிரிப் பரீட்சை 2021 இந்த ஆண்டும் இலங்கையில் இப்போது நடந்து வருகிறது. இம்முறை திருகோணமலை கல்வி வலையத்தில் இருந்து 43 பாடசாலைகளில் 2022 மாணவர்களும், நுவரெலியா கல்வி வலையத்தில் இருந்து 49 பாடசாலைகளில் 3085 மாணவர்களும் பட்டிருப்பு கல்வி வலையத்தில் இருந்து 38 பாடசாலைகளில் 1797 மாணவர்களும் பதுளை கல்வி வலையத்தில் இருந்து 20 பாடசாலைகளில் 937 மாணவர்களும் மற்றும் இதர நான்கு பாடசாலைகளில் 82 மாணவர்களும் மொத்தம் 154 பாடசாலைகள், 7923 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.
மாணவர்களின் நலன் கருதி நாம் ஒவ்வொரு கல்வி வலைய அலுவலகத்திலும் அப்பிராந்திய பாடசாலை அதிபர்களை அழைத்து அங்கு ஒரு வினாத்தாள்கள் கையளிக்கும் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்து வினாத்தாள்களை வலையக்கல்வி அதிகாரிகள் மூலமாக அதிபர்களுக்கு கையளிக்கிறோம்.
மேல் குறிப்பிட்ட பாடசாலைகளில் படிக்காத மாணவர்கள் கீழே உள்ள வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து அரசாங்கப் பரீட்சசைக்கு ஆயத்தம் ஆகும்படி வேண்டிக் கொள்கிறோம். இந்த இணைப்பை மற்றைய மாணவர்களுக்கும் பகிரவும்.
GCE O/L 2019 வினாத்தாள் |
GCE O/L 2019 விடைத்தாள் |
GCE O/L 2020 வினாத்தாள் |
GCE O/L 2020 விடைத்தாள் |
GCE O/L 2021 வினாத்தாள் |
GCE O/L 2021 விடைத்தாள் |
நாட்டில் தாள்களுக்குப் (Paper) பஞ்சம் இருந்தபோதிலும் நாம் முன்கூட்டியே அறிவித்தபடி அனைத்து பாடசாலைகளுக்கும் வினாத்தாள்கள் வழங்குகிறோம் என்பதை உறுதிப் படுத்துகிறோம்.