“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற பதாகையின் கீழ் சுமார் 42 வருடங்களுக்கு முன் இங்கு இலண்டனில் ஒரு சில நலன் விரும்பிகளாலும் சமூக செயற்பாட்டாளர்களாலும் ஆரம்பிக்கப் பட்ட சைவ முன்னேற்றச் சங்கமானது இன்று பல்வேறு கிளைகளையும் விழுதைகளையும் பரப்பி இன்று ஒரு மாபெரும் விருட்சமாய் வேரூன்றி தழைத்து நிற்கின்றது. இன்று இது ஆன்மீக, சமய பணிகளுக்கும் அப்பால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் அளப்பரிய தொண்டினை ஆற்றி வருகின்றது. இதற்கமைய இது இன்று பிரித்தானியாவில் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாக, ஆண்டுதோறும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு உறுப்பினர்களாலும் நிர்வாக அங்கத்தினர்களாலும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது.